×

பாஜ கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றம்

பரமக்குடி: குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, ஜீவா நகர் பகுதியில் பாஜ கொடிக்கம்பம் உள்ளது. இதில், அக்கட்சியினர் நேற்று தேசியக்கொடியினை ஏற்றி உள்ளனர். இவர்கள் கடந்த சுதந்திர தினத்தன்றும், இதே கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றினர். இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு திமுக, அதிமுக, காங். உள்ளிட்ட கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கண்டனம் ெதரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

 

The post பாஜ கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Baja ,Paramakudi ,Republic Day ,Jeeva Nagar, Paramakkudy, Ramanathapuram District ,Independence Day ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...