×

காதல் மனைவியை கொன்று கணவரும் தற்கொலை

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்பாண்டி மகன் அந்தோணிராஜ் (28). இவரும், நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணியை சேர்ந்த கோயில்ராஜ் மகள் ஜான்சிராணி கீதா (27) என்பவரும் சாத்தான்குளம் கல்லூரியில் படித்தபோது காதலித்து உள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு நாசரேத் அடுத்த தைலாபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி தம்பதியினர், குழந்தைகளை ஜான்சிராணி கீதாவின் பெற்றோர் வீட்டில் விட்டு வந்துள்ளனர். அன்றிரவு அந்தோணிராஜ், தைலாபுரம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜான்சிராணி கீதா மாயமானார். இதுகுறித்து புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தேரி காட்டுப்பகுதியில் ஜான்சிராணி கீதா துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. குடும்ப பிரச்னையில் அந்தோணிராஜ், காதல் மனைவி ஜான்சிராணி கீதாவை பைக்கில் காட்டுப் பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்றும், பின்னர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

The post காதல் மனைவியை கொன்று கணவரும் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chatankulam ,Anthony Raj ,Koovaikinaru village ,Chatankulam, Tuticorin district ,Koilraj ,Jansirani Geetha ,Vellarikkayurani ,Nazareth ,Satankulam College ,
× RELATED பள்ளியில் சக மாணவர்களுடன் மோதல்: 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு