×

முல்லை பெரியாற்றில் அணை கேரள அரசு கோரிக்கையை தமிழக அரசு ஏற்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாற்று அணை வலுவிழந்து உள்ளதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்டுவது தான் ஒரே தீர்வு என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கேரள அரசு அறிவித்திருக்கிறது. முல்லைப்பெரியாறு வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஓன்றில், தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகமும், கேரளமும் பேச்சு நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்தினால் புதிய அணையை கட்டிக் கொள்ளலாம் என கூறியிருந்தது. அதை பயன்படுத்திக் கொண்டு, தமிழக அரசை எப்படியாவது பேச்சுக்கு அழைத்து விட வேண்டும் என்றும் கேரள அரசு துடிக்கிறது. கேரள அரசின் நிலைப்பாட்டையும், கோரிக்கையையும் ஒன்றிய அரசோ, தமிழக அரசோ ஏற்கக்கூடாது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முல்லை பெரியாற்றில் அணை கேரள அரசு கோரிக்கையை தமிழக அரசு ஏற்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Kerala government ,Mullai Periyar ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Mullai Periyartu ,Mullaiperiyar ,Tamilnadu government ,Ramdas ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...