×

ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர் தயாரிப்பு

மும்பை: ஐரோப்பாவை சேர்ந்த ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் இந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து ஹெலிகாப்டர் ஆலையை இந்தியாவில் தொடங்க உள்ளது. ஏர்பஸ் எச் 125 ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கான ஹெலிகாப்டர் ஆகும். இந்தியாவில் விற்பனை செய்வது போக அண்டை நாடுகளுக்கும் இந்த ஹெலிகாப்டர்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஹெலிகாப்டர் ஆலை எங்கு அமைக்கப்படும் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. பணிகள் தொடங்கிய 24 மாதத்தில் ஆலை கட்டி முடிக்கப்பட்டு, 2026ம் ஆண்டில் முதல் ஹெலிகாப்டர் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று ஒன்றிய சிவில் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர்ராத்திய சிந்தியா தெரிவித்தார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கையயெழுத்தாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விமானம் பழுது பார்ப்பு, பராமரிப்பு கருவிகளை இந்தியாவில் தயாரிக்க பிரான்சின் தேல்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

The post ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர் தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Airbus ,MUMBAI ,Europe ,Tata Group ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...