×

அமெரிக்காவில் முதல் முறையாக நைட்ரஜன் வாயுவை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

அட்மோர்: அமெரிக்காவில் 1988ம் ஆண்டு, மார்ச் 18ம் தேதி எலிசபெத் சென்னட் (45) என்ற பெண்மணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்த விசாரணையில் அவரது கணவர் சார்லஸ் சென்னட் தனது மனைவியை கொலை செய்வதற்காக இரண்டு பேருக்கு தலா ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்தது தெரியவந்தது. இதனால், சார்லஸ் தற்கொலை செய்து கொண்டார். எலிசபெத்தை கொலை செய்த ஜான் பாரெஸ்ட் பார்கர் மற்றும் கென்னத் யூஜித் ஸ்மித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2010ம் ஆண்டு ஜானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கென்னத்துக்கு கடந்த 2022ம் ஆண்டு விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டது. ஆனால் ஊசியை செலுத்துவதற்கான நரம்பை மருத்துவர்களால் கண்டறிய முடியாததால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், முதல்முறையாக நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அலாபாமாவில் சிறையில் கென்னத் தனி அறையில் கட்டி வைக்கப்பட்டு அந்த அறை முழுவதும் நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

The post அமெரிக்காவில் முதல் முறையாக நைட்ரஜன் வாயுவை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : America ,Elizabeth Sennett ,United States ,Charles Sennett ,
× RELATED அமெரிக்காவில் போராட்டத்தை...