×

மியான்மர் எல்லையில் வேலி அமைக்க நாகலாந்து முதல்வர் எதிர்ப்பு: விவாதித்து முடிவு எடுக்க வலியுறுத்தல்

கோஹிமா: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் பேசுகையில், இந்தியா-மியான்மர் எல்லையில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவது முடிவுக்கு கொண்டு வரப்படும். வங்கதேசத்துடனான எல்லையை பாதுகாப்பது போன்று இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் பாஜவுடன் கூட்டணியில் உள்ள நாகலாந்து முதல்வர் நெப்யூ ரியோ கோஹிமாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முதல்வர் ரியோ, ‘‘நாகலாந்து மியான்மரின் எல்லை மாநிலமாக இருக்கிறது. தேவை ஏற்பட்டால் மக்களுக்கான பிரச்னையை தீர்ப்பது மற்றும் ஊடுருவலை தடுப்பது எப்படி என்பதற்கான சூத்திரத்தை நாம் உருவாக்க வேண்டும். ஏனென்றால் எல்லையின் இருபுறமும் நாகாக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இந்தியா பகுதியில் வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் நிலங்கள் மறுபக்கத்தில் மியான்மரில் உள்ளது. எனவே இந்தியா-மியான்மர் எல்லையில் ஒன்றிய அரசு வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக விரிவாக விவாதம் தேவை” என்றார்.

The post மியான்மர் எல்லையில் வேலி அமைக்க நாகலாந்து முதல்வர் எதிர்ப்பு: விவாதித்து முடிவு எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nagaland ,CM ,Myanmar ,Kohima ,Union ,Home Minister ,Amit Shah ,India- ,Myanmar border ,Bangladesh ,BJP ,Chief Minister ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...