×

காசாவில் உயிர்பலி, சேதங்களை கட்டுப்படுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

ஹேக்: பாலஸ்தீனத்தின் காசா மீது கடந்த மூன்று மாதங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காசாவின் பெரும்பகுதி தரைமட்டமாக்கி விட்டது. மேலும், 20 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். போரில் 26,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் இனரீதியான பேரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் போரை நிறுத்த அவசரகால நடவடிக்கை எடுக்க கோரி சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது.தென்னாப்பிரிக்காவின், குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ள இஸ்ரேல் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஜோவன் டோனோகோவ் தலைமையிலான 17 நீதிபதிகள் அடங்கிய குழு வழக்கின் விசாரணையை நேற்று தொடங்கினர். இஸ்ரேலிற்கு எதிராக தென்னாப்பிரிக்கா தாக்கல் செய்த மனுதொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் இரண்டு தரப்பினரும் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். காசாவில் ராணுவநடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் முதல் கட்ட உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சர்வதேச நீதிமன்றம் காசாவில் ஏற்படும் உயிர்பலி மற்றும் சேதங்களை குறைக்குமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.

The post காசாவில் உயிர்பலி, சேதங்களை கட்டுப்படுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gaza ,International Court of Justice ,Israel ,Hague ,Palestine ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...