×

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுக்கு 4 பேர் கொண்ட குழு: மார்க்சிஸ்ட் செயற்குழு தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி தலைமை வகித்தார். கூட்டத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒன்றிய பாஜ அரசை ஆட்சியிலிருந்து விரட்டும் குறிக்கோளோடு நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி செயல்படுகின்றன. இந்த கூட்டணி நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகள் வீடு, வீடாக சென்று ஒன்றிய பாஜ அரசின் நாசகர கொள்கைகளையும், அதற்கு துணைபோகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அம்பலப்படுத்தி பிரசாரம் செய்து, எதிர்வரும் தேர்தலில் பாஜவை படுதோல்வி அடையச் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத் (குழு தலைவர்), பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், க.கனகராஜ் ஆகியோர் செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுக்கு 4 பேர் கொண்ட குழு: மார்க்சிஸ்ட் செயற்குழு தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,state executive committee ,Communist Party of China ,N. Pandi ,G. Ramakrishnan ,state secretary ,K. Balakrishnan ,P. Sampath ,U. Vasuki ,P. Shanmugam ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்