×

அவதூறு வழக்கில் 3 நிமிடத்துக்கும் குறைவாக சாட்சியமளித்த டிரம்ப்: நீதிபதிகள் கண்டிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது டொனால்ட் டிரம்ப், பத்திரிக்கையின் பெண் கட்டுரையாளருக்கு பாலியல் தொல்லை மற்றும் அவதூறு குற்றச்சாட்டுக்கள் கூறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோலுக்கு இழப்பீடாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என்று மான்ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கட்டுரையாளர் குறைந்தது 10மில்லியன் டாலராவது தனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வாதிட்டு வருகின்றார். இந்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவதூறு வழக்கில் தனக்காக டிரம்ப் சாட்சியமளிக்கும்போது, ஆம், இல்லை என்று பதிலளிக்கும்படி நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் டிரம்ப் இந்த விதிமுறைகளை மீறி எதிர்மறையான கருத்துக்களை கூறினார். இதன் காரணமாக அந்த கருத்துக்களை புறக்கணிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார். இதனால் நீதிமன்ற இடைவேளையின் போது டிரம்ப், தனது தோள்களை குலுக்கி இது அமெரிக்கா இல்லை என்று மூன்று முறை கூறினார். பின்னர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார். அப்போது 3நிமிடத்துக்கும் குறைவாகவே அவர் சாட்சியமளித்தார்.இதனால், அவரை நீதிபதிகள் கண்டித்தனர்.

The post அவதூறு வழக்கில் 3 நிமிடத்துக்கும் குறைவாக சாட்சியமளித்த டிரம்ப்: நீதிபதிகள் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Trump ,New York ,Donald Trump ,United States ,Jean Carroll ,President Donald Trump ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்