×

உடல் நலத்துடன் மனநலத்தையும் விளையாட்டு ஊக்குவிக்கிறது: இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் மாணவர்களுக்கு அறிவுரை

கடலூர்: உடல் நலத்துடன் மனநலத்தையும் விளையாட்டு ஊக்குவிக்கிறது வாழ்க்கையில் நெறிமுறைகளை சிறப்பான முறையில் செயல்படுத்த கற்றுக் கொடுக்கிறது என இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் பேட்டி அளித்துள்ளார்.கடலூரில் குடியரசு தின விழா, கிரிக்கெட் அகாடமி துவக்கம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் பத்ரிநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்திற்கு முதன் முறையாக வருகை தந்துள்ளேன்.

இந்திய அணியில் இடம்பெற்று விளையாடியதை போன்று தற்போதைய இளைய தலைமுறைகள் மாணவர் பருவத்தினர் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு இந்தியா அளவில் தமிழகத்திலிருந்து இடம்பெற வேண்டும் .அதற்காக இதுபோன்ற கிரிக்கெட் அகாடமிகள் முழுமையாக பயன்படும் .மாவட்ட அளவில் தமிழகத்தில் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உருவாகி வருவது மகிழ்ச்சி. டோனி போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமிழக மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மனதில் இடம் பிடித்து தத்துப் பிள்ளையாக மாறி உள்ளார் .தமிழக ஐபிஎல் அணிக்காகவும் விளையாடி உள்ளது பெருமை சேர்க்கிறது. இதன் மூலம் ஒரு சிறிய மாவட்டத்தின் பகுதியிலிருந்து இந்திய அளவில் பேசப்படும் வீரராக தோனி இடம்பெற்றதை போன்று இதுபோன்று தமிழக மாவட்ட மாணவர்களுக்கும் டோனி போன்று வரவேண்டும் என்பதில் முன் மாதிரியாக அமைந்துள்ளார்.

உடல் நலம் மட்டுமின்றி மனநலத்தையும் விளையாட்டு உறுதியாக்குகிறது. வாழ்க்கை நெறிமுறைகளை ஒருநிலைப்படுத்தி சிறப்பாக செயல்பட வழிவகை செய்கிறது. எனவே மாணவர் சமுதாயத்தினர் படிப்பில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டில் அக்கறை கொண்டு சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளாக வர வேண்டும் என்றார். கடலூர் ஹாக்கி அகடமி கௌரவத் தலைவர் அரிஸ்டோ சிவகுமார், பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, தாளாளர் சொக்கலிங்கம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

The post உடல் நலத்துடன் மனநலத்தையும் விளையாட்டு ஊக்குவிக்கிறது: இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் மாணவர்களுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Badrinath ,Cuddalore ,Republic Day Festival ,Cricket Academy ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...