×

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே திட்டத்தை கொண்டுவர திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவர உள்ளதாக ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கூறியதாவது:
பர்வத் மாலா பரியோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 200 ரோப்வே சாலைகள் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அதிக செலவு கொண்டது என்பதால், அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக மலைப்பகுதிகளில் சுற்றுலாவின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் ரோப்வே சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து எளிதாக அமைவதுடன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஒட்டுமொத்தமாக 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப்வே சாலைகள் அமைக்கப்படும்.

இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ரோப்வே சாலையாக இது அமையும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

The post போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே திட்டத்தை கொண்டுவர திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Delhi ,Union Transport Minister ,Nitin Khatkari ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து!