×

பெண் சார்பதிவாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கே.வி.குப்பத்தில் பரபரப்பு சாதிப்பெயரை கூறி இழிவாக பேசியதாக

 

கே.வி.குப்பம், ஜன.26: கே.வி.குப்பத்தில் சாதிப்பெயரைக்கூறி இழிவாக பேசியதாக பெண் சார்பதிவாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சக்தி மாரியம்மன் கோயில் தெரு, கவசம்பட்டு ரோட்டை சோர்ந்தவர் கீதா(50). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (52) என்பவருடன் கடந்த 2003ல் திருமணமானது. இவர்களுக்கு திருமணமாகி சுமார் 20 ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை. இதனால், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். எனவே, திருமணம் சான்றிதழ் வாங்க 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதியன்று கே.வி.குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பெண் சார்பதிவாளர் கவிதா இத்தம்பதியை சாதி பெயரை சொல்லியும், இவர்களை 2 மணி நேரத்திற்கு மேலாக அலைக்கழித்து சான்றிதழ் இல்லை எனக்கூறி மன உளைச்சல் ஏற்படுத்தியதாக நவம்பர் மாதம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு அந்த மனு அனுப்பப்பட்டது. மனுவினை பெற்றுக் கொண்ட விசாரணை அதிகாரியான சப் இன்ஸ்பெக்டர் ஜெய்குமார், முன்னதாக வழக்கு பதிவு செய்துள்ளார். தொடர்ந்து தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கே.வி.குப்பம் சார்பதிவாளர் கவிதா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு‌பெண் சார்பதிவாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த சம்பவம் பதிவு துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பெண் சார்பதிவாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கே.வி.குப்பத்தில் பரபரப்பு சாதிப்பெயரை கூறி இழிவாக பேசியதாக appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Vellore District ,KV Kuppam Sakthi Mariamman Koil Street, Kavasampatu Road Tired Geetha ,50 ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது கே.வி.குப்பம் அருகே