×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலம் திறந்தார் திருச்சி மாநகராட்சி 27வது வார்டில் பகுதி சபா கூட்டம்

 

திருச்சி, ஜன.26: திருச்சி மாநகராட்சி 27வது வார்டில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் மேயர் அன்பழகன் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார். தேசிய வாக்களர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி மாநகராட்சியின் 5வது மண்டலத்துக்கு உட்பட்ட 27வது வார்டு ஆட்டுமந்தை தெருவில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். இந்த பகுதி சபா கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மேயர் அன்பழகன் பெற்றுக்கொண்டார். ஆட்டுமந்தை தெரு, ஆப்பகாரத்தெரு, வள்ளுவர் தெரு, பிஷப்குல தெரு, சவேரியார் கோவில் தெரு, புத்தூர் பாத்திமாதெரு, வி.என்.பி. தெரு, மீன்கார தெரு, பெருமாள்கோவில் தெரு, முலைக்கொல்லை, தென்னூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் அளித்த 46 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.

முன்னதாக மேயர் அன்பழகன் 27வது வார்டு பகுதிகளில் முடிவுற்ற திட்ட பணிகள், வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் திட்ட பணிகளை பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.மாநகராட்சியின் 65 வார்டு பகுதிகளிலும் பகுதி சபா கூட்டம் துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி கமிஷனர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலம் திறந்தார் திருச்சி மாநகராட்சி 27வது வார்டில் பகுதி சபா கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Trichy Municipal ,Corporation ,27th Ward Area Sabha ,Trichy ,Mayor ,Anbazhagan ,District Sabha ,Ward 27 ,Trichy Corporation ,National Voter's Day ,Area Sabha ,Udayanidhi Stalin ,27th Ward ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...