×

குடியரசு தினத்தையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

மதுரை, ஜன.26: குடியரசு தினத்தையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே இருப்பு பாதை போலீசார் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். ஒத்திகையின் போது, வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து ரயில் நிலையத்தில் பார்சல் சர்வீஸ், கார் பார்கிங், டூவீலர் பார்க்கிங் உள்ளிட்டவைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தென்மாவட்டங்களுக்கு சென்று வரும் ரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பஸ் நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

The post குடியரசு தினத்தையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Railway Station ,Republic Day ,Madurai ,Dinakaran ,
× RELATED மனைவியை பிரிந்த கணவர் பசியால் கதறிய...