×

மொழிப்போர் தியாகிகளுக்கு மதிமுக சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

 

கோவை, ஜன. 26: கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி காந்திபுரம் வி.கே.கே.மேனன் ேராட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் அ.சேதுபதி, மாநில சட்டத்துறை செயலாளர் வக்கீல் சூரி.நந்தகோபால், மாநகர் மாவட்ட துணை செயலாளர் சித்ரா தங்கவேல், பகுதிக்கழக செயலாளர்கள் எஸ்.பி.வெள்ளியங்கிரி, அன்பு என்கிற தரமராஜ், எல்.லூயிஸ், கே.பழனிசாமி, மு.ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கு.விஜயகுமார், பேங்க் குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள், சி.ராமச்சந்திரன்,

கே.எம்.ஷாஜகான், மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி, மாணவர்அணி அமைப்பாளர் ராஜீவ்குமார், விவசாய அணி அமைப்பாளர் காளிச்சாமி, பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜன், மகளிர் அணி அமைப்பாளர் சுஜிதா தர்மராஜ், தொண்டர்அணி அமைப்பாளர் சண்முகம், சி.வி.தங்கவேல், துணை அமைப்பாளர்கள் புஷ்பா கலையரசன், ஆதித்யா, அருள் சக்தி, மற்றும் சிடிசி சண்முகசுந்தரம், வார்டு செயலாளர் வாசுதேவன், வீரபாண்டி வேலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post மொழிப்போர் தியாகிகளுக்கு மதிமுக சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Language War ,Madhyamk ,Coimbatore ,Coimbatore District Madhyamuk ,VKK Menon Yerat, Gandhipuram ,District Secretary ,Ganapathi Selvaraj ,Madhyamik ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...