×

160கிமீ வேகத்தில் சென்ற ரயில் இன்ஜினில் கவாச் கருவி சோதனை

புதுடெல்லி: ரயில் விபத்துகளை தடுக்கும் கவாச் கருவி 160கிலோமீட்டர் விரைவு ரயில் இன்ஜினில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ரயில் விபத்துகளை தடுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவி கவாச். உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள கவாச் கருவி, தானியங்கி பிரேக்குகளை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேகவரம்புக்குள் ரயிலை இயக்க லோகோ பைலட்டுக்கு உதவுகிறது. மேலும் மோசமான வானிலையின்போது பாதுகாப்பாக ரயிலை இயக்கவும் கவாச் உதவுகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவனத்தில் இருந்து அரியானாவின் பல்வால் இடையே கடந்த 19ம் தேதி அரை விரைவு ரயில் இன்ஜினில் கவாச் கருவி பொருத்தப்பட்டு 160கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது. வேகமாக ஓடி கொண்டிருந்த இன்ஜின் சிவப்பு சிக்னல் எரிந்ததும் கவாச் கருவி தானாகவே பிரேக் போட்டு ரயிலை நிறுத்தியது. இதையடுத்து இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக வடமத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

 

The post 160கிமீ வேகத்தில் சென்ற ரயில் இன்ஜினில் கவாச் கருவி சோதனை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Kavach ,Kawach ,Dinakaran ,
× RELATED தெற்கு ரயில்வேயின் 25 வழித்தடங்களில்...