×

ஒய்.எஸ்.ஆர் குடும்பம் பிரிவுக்கு ஜெகன் மோகன் தான் காரணம்: ஷர்மிளா பரபரப்பு குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின்னர் ஒய்.எஸ்.ஷர்மிளா மாநிலம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவ்வாறு காக்கிநாடா மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்மிளா கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஜெகன் மோகன் மாநிலத்தையும் அவரது குடும்பத்தையும் காங்கிரஸ் பிளவுபடுத்தியதாக பேசியுள்ளார். முன்னாள் முதல்வர் ராஜசேகர் குடும்பம் பிரிந்ததற்கு ஜெகன்மோகன் தான் காரணம். அவர் தனது சொந்த கைகளால் குடும்பத்தை சிதைத்து கொண்டார். இதற்கு கடவுள், விஜயம்மா மற்றும் எனது குடும்பமே சாட்சி.

முதல்வர் ஜெகன் மோகன் வெற்றிக்கு 3,200 கிலோமீட்டர் பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டேன். சுயநலம் பாராமல் ஜெகனுக்காக கேட்ட அனைத்தையும் செய்தேன். மக்களுக்கு நல்லது செய்வார் என நம்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. ஆந்திர மாநிலம் பாஜகவின் அடிமையாகிவிட்டது. முதல்வர் ஜெகன் மோகன் பாஜகவின் அடிமையாகி உருக்கு ஆலையை பணயம் வைத்தார். அவருக்காக ராஜினாமா செய்த 18 பேரில் எத்தனை பேர் அமைச்சர் ஆனார்கள். எனது குடும்பம் பிளவுபடும் என்பதை அறிந்துதான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். நான் தனிப்பட்ட முறையில் குறிவைத்து விமர்சிக்கப்படுவேன் என்பதும் எனக்குத் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post ஒய்.எஸ்.ஆர் குடும்பம் பிரிவுக்கு ஜெகன் மோகன் தான் காரணம்: ஷர்மிளா பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Y. S. Jegan Mohan ,Sharmila ,AP ,Congress ,president ,Y. S. Sharmila ,Sharmila Party ,Khakinada district ,
× RELATED சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட...