×

மேற்கு வங்கத்தில் நீதி யாத்திரை வெறுப்பு, வன்முறையை பாஜ பரப்பி வருகின்றது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கூச் பீகார்: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நேற்று மேற்கு வங்கத்தில் நுழைந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் வியாழனன்று அசாமில் நுழைந்த யாத்திரை 8வது நாளான நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டது. தொடர்ந்து கோலக்கஞ்சில் நுழைந்த யாத்திரைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. கூச் பீகார் மாவட்டத்தில் உள்ள பக்சிர்ஹட் வழியாக மேற்கு வங்கத்தில் நுழைந்தது. அங்கு காங்கிரஸ் மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராகுலை வரவேற்றார். அங்கு கொடி ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காக்ராபார் சவுக் நோக்கி யாத்திரை புறப்பட்டது. பின்னர் மா பவானியில் இருந்து ராகுல் பாத யாத்திரையாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

தொடர்ந்து இன்றும் நாளையும் மேற்கு வங்க மாநிலத்தில் நீதி யாத்திரை மேற்கொள்ளப்படும். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, ‘‘பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி வருகின்றது. நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால் யாத்திரையில் நீதி என்ற வார்த்தை இணைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக இந்தியா கூட்டணி போராடும்”என்றார். டெல்லி சென்றார்: ராகுல்காந்தி தலைமையிலான நீதி யாத்திரை நேற்று மேற்கு வங்கத்தின் கூச் பீகார் மாவட்டத்தை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து யாத்திரைக்கு இரண்டு நாள் ஓய்வு விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராகுல்காந்தி சிறப்பு விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார். 28ம் தேதி யாத்திரை மீண்டும் தொடங்குகிறது.

 

The post மேற்கு வங்கத்தில் நீதி யாத்திரை வெறுப்பு, வன்முறையை பாஜ பரப்பி வருகின்றது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Justice Yatra ,West Bengal ,BJP ,Rahul Gandhi ,Cooch Behar ,Indian Unity Justice Yatra ,Congress ,president ,Bharat Jodo Justice Yatra ,Assam ,
× RELATED பழைய தொகுதியை மாற்றியதால் மேற்கு வங்க பாஜவில் அதிருப்தி