×

தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சென்னை: காவல்துறையில் மெச்சத்தக்க பணிக்கான தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி உட்பட 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் காவல்துறையில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தேர்வு செய்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உயரிய விருதான குடியரசு தலைவர் விருதுக்கு தேர்வு செய்வது வழக்கம். அதன்படி 2023ம் ஆண்டு காவல்துறையில் மெச்சத்தக்க பணிக்காக தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகள் குடியரசு தலைவர் விருதுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் ஐஜிக்கள் லலிதா லட்சுமி, லோகநாதன், நரேந்திரன் நாயர், ரூபேஷ் குமார் மீனா, கமண்டன்ட் ராஜசேகரன், டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் செங்குட்டுவன், தேவேந்திரன், மணி, சாலமன் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லதுரை, ராஜகோபால், பழனிவேல், ராயமுத்து மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்பாபு, வெங்கடேசன், அனில்குமார், ஈஸ்வரன், அருள்முருகன், குணசேகரன், சுந்தரம், எஸ்.வெங்கடேசன், உதவி கமண்டன்ட் அழகுதுரை ஆகிய 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Home Ministry ,CHENNAI ,IPS ,Tamil Nadu Police ,Dinakaran ,
× RELATED ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான...