×

ஆதித்யா விண்கலத்தின் மேக்னோ மீட்டர் பூம் கருவி ஒளிவட்ட பாதையில் நிறுத்தம்: இஸ்ரோ தகவல்

சென்னை: சூரியனை ஆராய கடந்த செப்.2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாசதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்-1 லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் தனது பயணத்தை செப்.19ம் தேதி தொடங்கியது.

ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த ஜன.6ம் தேதி லெக்ராஞ்சியன் புள்ளி எல்-1 புள்ளியில் ஒளிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன்மூலம் சூரியனை ஆராயும் இந்தியாவில் முதல் விண்வெளி திட்டம் என்ற சாதனையை ஆதித்யா விண்கலம் பெற்றது. இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள மேக்னோமீட்டர் பூம் கருவி ஒளிவட்ட பாதையில் நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: காந்த மண்டலங்களை ஆராய உதவும் 6 மீட்டர் மேக்னோமீட்டர் பூம் கருவியை கடந்த 132 நாட்களாக விண்கலம் ஏந்தி சென்றது. மேக்னோமீட்டர் பூமில் 2 பிளக்ஸ்கேட் மேக்னோமீட்டர்கள் கருவிகள் உள்ளன. விண்வெளியில் உள்ள கிரகங்களுக்கு இடையேயான காந்தப்புலத்தை அளவிட இது உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதித்யா விண்கலத்தின் மேக்னோ மீட்டர் பூம் கருவி ஒளிவட்ட பாதையில் நிறுத்தம்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,Sriharikota Satish Dhawan Space Research Center ,Sun ,Earth ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...