×

திருப்பூரில் தனியார் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டதாக மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவரை நேற்று 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலை, சீமான், அன்புமணி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திட்டுள்ளனர்.

அதோடு படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும், புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டதாக மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பூரில் தனியார் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,IG ,Bhawaneeswari ,Palladam of Tirupur district ,Nesaprabhu ,Palladam Taluk ,Tirupur district ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...