×

கங்கையில் சிறுவனை பலமுறை மூழ்க வைத்த பெற்றோர்: புற்று நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் சிறுவன் பலி

உத்தரகாண்ட்: மருத்துவத்தை விட கங்கைநதியில் மூழ்கவைத்து வேண்டினாள் புற்றுநோயிலிருந்து உடனடியாக குணம் கிடைக்கும் என்ற பெற்றோரின் மூட நம்பிக்கை ஒரு மகனின் உயிரையே பலிவாங்கியுள்ளது. டெல்லியை சேர்ந்த பெற்றோர் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது மகனுடன் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்துவார் நகரத்திற்கு வந்தனர்.

தங்கள் மகனுக்கு உள்ள ரத்த புற்றுநோய் கங்கை நீரில் குளித்தால் முற்றிலும் குணமாகிவிடும் என்று நம்பிய அவர்கள் சிறுவனை பலமுறை தொடர்ச்சியாக கங்கை ஆற்றில் மூழ்க செய்தனர். இந்த செயலால் கடுமையாக மூச்சு திணறலுக்கு ஆளான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகனை மருத்துவர்கள் கைவிட்டனர் என்றும் அதிசயம் நிகழும் என்ற நம்பிக்கையால் மீண்டும், மீண்டும் கங்கையில் குழந்தையை மூழ்கடித்ததாக பெற்றோர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ள உத்தரகாண்ட் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கங்கையில் சிறுவனை பலமுறை மூழ்க வைத்த பெற்றோர்: புற்று நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Ganga ,Uttarakhand ,Delhi ,Haridwar, Uttarakhand ,Ganges ,
× RELATED புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய...