×

எம்.பி.கலாநிதி வீராசாமி வீடு முன் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா மீது வழக்குபதிவு

சென்னை: எம்.பி.கலாநிதி வீராசாமி வீடு முன் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாநகரில் வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி வீட்டில் நேற்று முன்தினம் பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மாநில நிர்வாகி அலிசா அப்துல்லா அவரது உறவினர்கள் காரை நிறுத்தி பார்க்கிங் செய்து பிரச்சனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மேனேஜர் சரவணன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக கொலை முயற்சி, ஆபாசமாக திட்டுதல், தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மாநில நிர்வாகியான அலிசா அப்துல்லா, அவரது மாமனார் தேவராஜ், அவரது மனைவி கலைவாணி ஆகியோர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அலிசா அப்துல்லா தரப்பிலிருந்தும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும். அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் புகார் தொடர்பாக இரு தரப்பிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post எம்.பி.கலாநிதி வீராசாமி வீடு முன் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : M. B. ,BJP ,Alisa Abdullah ,Khananidi Weerasami ,Chennai ,Kalanidi Weerasami ,Annanagar, North Chennai ,Sports Development Department ,Mundinam ,Bajaga ,P ,Kalaniti Weerasami ,
× RELATED கர்நாடகாவில் பாஜக எம்.பி. சார்பில்...