×
Saravana Stores

மானநஷ்ட வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்..!!

சென்னை: ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு நடிகர் பாபி சிம்ஹாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூணின் சகோதரர் மகன் உசேன் தொடர்ந்த வழக்கில் சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. வனத்துறை தொடர்பான பல வழக்குகளை தான் சந்தித்து வருவதாக பாபி சிம்ஹா அவதூறாக பேசியுள்ளார் என உசேன் புகார் தொடர்ந்திருந்தார். வனத்துறை வழக்கை எதிர்கொள்வதாலும் உருவ கேலியாலும் மன உளைச்சல் அடைந்தேன் என மனுதாரர் உசேன் குறிப்பிட்டுள்ளார். பாபிசிம்ஹா பதிலளிக்க உத்தரவிட்ட ஆலந்தூர் நீதிமன்றம் வழக்கை பிப்.2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

The post மானநஷ்ட வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Alandur court ,Bobby Simha ,CHENNAI ,JM Arun ,Usain ,Dinakaran ,
× RELATED சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது