×

கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கோவை: கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கிருஷ்ணன். இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்துள்ளார். காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். திமுகவில் இணைந்து, காளப்பட்டி பகுதிச் செயலாளராக இருந்தார். பிறகு திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்தார்.

கடந்த 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில், கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்னைகள் நிலவி வந்ததாகவும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மரணமடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். கவுண்டம்பாளையம் பகுதியில் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் ஆற்றிய மக்கள் சேவை மகத்தானது. ஆர்.கிருஷ்ணனின் தொண்டு கவுண்டம்பாளையம் மக்களால் மட்டுமின்றி, திமுகவினராலும் என்றென்றும் மறக்க முடியாதது. பையா என்ற கிருஷ்ணனை இழந்து வாடும் குடும்பத்தினர், திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

The post கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Kowai Managar West District Dimuka ,Paya ,Chief Minister ,K. Stalin ,KOWAI ,ADMINISTRATOR ,MANAGAR WEST DISTRICT ,DIMUKA ,Kṛṣṇa ,Paya Krishnan ,Kowai Balapati ,Balapati Province ,Govai ,Managar West District Dimuka ,
× RELATED பாஜவில் இருக்கிறது எல்லாம் திருட்டு...