×

தஞ்சாவூரில் பெண் போலீசிடம் தகராறு செய்ததாக கைதான இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!!

மதுரை: பெண் போலீசிடம் தகராறு செய்ததாக கைது செய்யயப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் உட்பட 3 பேருக்கு ஐகோர்ட் கிளை ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 6ம் தேதி தஞ்சையில் ஆஞ்சநேயர் கோயில் முன் அமர்ந்து 3 பேர் மது அருந்தியுள்ளனர். பெண் காவலர் ஆதிநாயகி அந்த பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு மது அருந்தியவர்களை தட்டி கேட்டு கோவில் பகுதி இங்கு மது அருந்த கூடாது கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். கலைந்து செல்ல மறுத்த அவர்கள் பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். இது குறித்து பெண் காவலர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் தகராறில் ஈடுபட்டிருந்த குபேந்திரன் உள்ளிட்ட மூன்று நபர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அதில் குபேந்திரன் என்பவர் அப்பகுதியில் இந்து முன்னணி பிரமுகரான பதவி வகித்து வருகிறார். 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்ற காவலர்கள் உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது நடவடிக்கை தகுந்தாற்போல் 3 பேரும் சிறையிலடைத்தனர். சிறையில் உள்ள 3 பேரும் தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது, விசாரணையின் போது மனு தாரரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கு என்பது காவல்துறையால் பதியப்பட்ட பொய் வழக்கு எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கக்கூடிய நிபந்தனையை பின்பற்றுவதாகவும், தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

ஆனால் அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் நம்பி செல்வன் ஆஜராகி காவலர் முன்பாக மிகவும் உள்ளாடைகளெல்லாம் கழற்றி அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர். மேலும் மது போதையில் இவர்கள் இருந்துள்ளனர். இவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது மேலும் இந்து முன்னணி பிரமுகர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே 3 பேருடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி தண்டபாணி இந்து முன்னணி பிரமுகரான குபேந்திரனுடைய மனுவை தள்ளுபடி செய்துள்ளார். ஏற்கனவே காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவே அவருக்கு ஜாமின் வழங்க முடியாது என்று தள்ளுபடி செய்த நீதிபதி, மேலும் இருவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

The post தஞ்சாவூரில் பெண் போலீசிடம் தகராறு செய்ததாக கைதான இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Hindu Front ,Thanjavur ,Madurai ,High Court ,Anjaneya temple ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...