×

ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில், உக்ரைன் போர் கைதிகள் உட்பட 74 பேர் உயிரிழப்பு!!

கீவ் : உக்ரைன் பிணைக்கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தில் 74 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் படையில் சிறைபிடித்து வீரர்கள் 65 பேருடன் இலியுஷின்-76 விமானம் பெல்கோராட்டிலிருந்து விமானப்படை தளம் நோக்கி சென்று கொண்டு இருந்த போது, விபத்து நேரிட்டுள்ளது. விமானி உட்பட 74 பேர் பயணித்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. விமானம் தீப்பற்றி எரிந்ததில் 65 உக்ரைன் கைதிகள், ஆறு விமான பணியாளர்கள், மூன்று பாதுகாப்பு படை வீரர்கள்உட்பட அனைவரும் உயிரிழந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி பிராந்தியஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் 65 உக்ரைன் வீரர்கள் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் உக்ரைன் கைதிகள் இருந்த விமானத்தை அந்நாட்டு ராணுவமே சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. இந்த விபத்து குறித்து ரஷ்ய நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகர் வியாஸ்செஸ்லாவ் வேலோடின் கூறுகையில், “ரஷ்ய ராணுவ விமானத்தை உக்ரைன் சுட்டுவீழ்த்தியுள்ளது. தங்களது சொந்த வீரர்களையே உக்ரைன் ராணுவம் கொன்றுள்ளது. இந்த சம்பவத்தில், மனிதாபிமான பணியை மேற்கொண்ட ரஷ்ய விமானிகளும் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்’’ என்றார்.

The post ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில், உக்ரைன் போர் கைதிகள் உட்பட 74 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kiev ,Ukrainian army ,Belgorat ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...