×

இளைஞரிடம் செயின், செல்போன் பறிப்பு

தேவதானப்பட்டி, ஜன. 25: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி வடக்கு காலனியைச் சேர்ந்த காந்த் மகன் ஹரிதாஸ்(19). இவர் தனது டூவீலரில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து அ.ரெங்கநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு நபர் ஹரிதாஸிடம் லிப்ட் கேட்டு ஏறி மருகால்பட்டி பிரிவில் இறக்கி விடுமாறு கூறி சென்றுள்ளார். மருகால்பட்டி பிரிவு வந்தவுடன் கீழே இறங்கி, அவசரமாக போன் செய்ய வேண்டும் என அவருடைய செல்போனை வாங்கியுள்ளார். செல்போன் பேசுவது போல இருந்து ஹரிதாஸ் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து ஹரிதாஸ் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இளைஞரிடம் செயின், செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chain ,Devadanapatti ,Haridas ,Pomminayakkanpatti North Colony ,A. Renganathapuram ,Pomminayakkanpatti ,Marukalpati ,
× RELATED கடலூரில் துணிகரம் சிறுமி, பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு