×

பட்டிவீரன்பட்டி சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா: ஏராளமானோர் பங்கேற்பு

பட்டிவீரன்பட்டி, ஜன. 25: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று முன்தினம் முதல் நாள் யாக சாலை பூஜைகள் துவங்கின. அன்று மங்கள இசை, விநாயகர் ஹோமம், வாஸ்து சாந்தி, முளைப்பாரி தீர்த்தம் அழைத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று 2ம் கால யாக சாலை பூஜைகளான வருண பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட 7 விதமான ஹோமங்களும், நாடி சந்தனம், பூர்ணாகுதி, வேதபாராயணம் சதுர்வேதம் தீபாராதனையை தொடர்ந்து, புண்ணிய கலசங்கள் ஆலயம் வலம் வந்தது.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தன கோபுர விமான கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி,

The post பட்டிவீரன்பட்டி சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,Chittarevu Varadarajaperumal Temple Kumbabhishek ceremony ,Kumbabishek ,Varadaraja Perumal ,Hindu Religious Charitable Trust ,Chittarevu ,Siddharevu Varadarajaperumal Temple Kumbabhishek ceremony ,
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...