×

தஞ்சாவூர் தஞ்சாவூர் அரண்மனை வளாக வவ்வால்களை பாதுகாக்க வேண்டும்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாக பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழந்தின்னி வவ்வால்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. உலகில், 1 லட்சம் பாலுாட்டிகள் இருந்தன. தற்போது, 4 ஆயிரம் மட்டுமே உள்ளதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பறக்கக்கூடிய தன்மை கொண்ட ஒரே பாலுாட்டி இனம் என்றால் அது வவ்வால்கள்தான். இரவில் விழித்து, பகலில் பதுங்கி வாழும் வவ்வால் இனம், கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருவதாக, பறவை ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். உலகில், 1,200 வகை வவ்வால்கள் உள்ளன. இவை பழந்தின்னி, பூச்சித்தின்னி என, இரு பிரிவாக உள்ளன. இவற்றை எளிதில் வித்தியாசம் கண்டுபிடித்து விட முடியும். பழந்தின்னி வவ்வால் பெரிய கண்கள், குழல் போன்ற மூக்கு, சிறு காது இருக்கும். இவை, 2 கிலோ எடை வரை இருக்கும். தேன், பூ இதழ்கள், மகரந்த துாள், அழுகிய பழங்களை சாப்பிடும்.

The post தஞ்சாவூர் தஞ்சாவூர் அரண்மனை வளாக வவ்வால்களை பாதுகாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Thanjavur Palace ,Thanjavur ,Government Girls Higher Secondary School ,Thanjavur Palace ,Dinakaran ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது