×

பள்ளி மாணவி மாயம்

தோகைமலை, ஜன.25: கடவூர் அருகே மாயமான 17வயது பள்ளி மாணவியை பாலவிடுதி போலீசார் தேடி வருகின்றனர். கடவூர் அருகே பாலவிடுதி ஊராட்சி பாலவிடுதி ரவி என்பவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த பெண் பாலவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி, ரவியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. எனவே கரூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இதனால் ரவி, தனது மனைவிக்கு துணையாக மருத்துவமனையில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்த மகளிடம் சாப்பாடு கொண்டு வருமாறு கூறினார். ஆனால் பெண் நீண்டநேரமாகியும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவுசெய்து பள்ளி மாணவியை தேடுகின்றனர்.

The post பள்ளி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Balavidthi ,Kadavur ,Palavidhudi Ravi ,Palavidhudi ,Balavidhi Government Higher Secondary School ,Mayam ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்