×

சைபர் குற்றங்களின் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்பட போட்டி: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சைபர் குற்றங்களின் அபாயங்களை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்பட போட்டி நடைபெறும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் சமீபகாலங்களில் நடந்து வரும் சைபர் குற்றங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பல முயற்சிகளை காவல்துறை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒரு அங்கமாக குறும்பட போட்டி மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தலைப்பிற்கும் சிறந்த இரண்டு குறும்படத்திற்கு பணப்பரிசு வழங்கப்பட உள்ளது.

சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கான ஒரு குறும்பட போட்டி டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அறப்போரில் மாணவர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களை ஈடுபடுத்த முயல்கிறது. சைபர் குற்றங்களின் அபாயங்களைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சக்திவாய்ந்த கருவியாக செயல்படும் அழுத்தமான குறும்படங்களை உருவாக்க இந்த போட்டி படைப்பாளர்களை அழைக்கிறது.

போட்டியாளர்கள் பகுதி நேர வேலை தொடர்பான மோசடி, சமூக ஊடக மோசடி, முதலீட்டு மோசடி, ஆன்லைன், வர்த்தகம், கிரிப்டோகரன்சி, தங்க வர்த்தகம், திருமணம் பரிசு மோசடி, கடன் விண்ணப்ப மோசடி ஆகிய 5 தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் குறும்படம் உருவாக்க வேண்டும். குறும்பட அளவு 3 நிமிடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், கடைசி தேதி பிப்ரவரி 5ம் தேதி. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் cyberawarenessshortfilm@gmail.com. வீடியோ குவாலிட்டி திரையரங்குகளில் மற்றும் பெரிய டிஜிட்டல் திரையில் போடும் அளவிற்கு தெளிவாக இருக்க வேண்டும்.

தொடர்புக்கு ரஞ்சித் உதவியாளர் 8838487920, ஜெகன் நிவாஸ் உதவி ஆய்வாளர் 9087730080, ஒவ்வொரு தலைப்பிற்கும் பரிசுத் தொகை, முதல் பரிசு ரூ.1லட்சம், இரண்டாவது பரிசு ரூ.50 ஆயிரம் பொதுமக்கள் ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் கிரைம் குற்றங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சைபர் குற்றம் தொடர்பான உதவிக்கு உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற வெப்சைட் மூலம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சைபர் குற்றங்களின் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்பட போட்டி: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…