×

பழநியில் அதிநவீன புதிய வின்ச்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள ஒரு வின்ச்சில் ஒரே நேரத்தில் 32 பேர் மட்டுமே பயணிக்க முடிந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 3வது வின்ச்சுக்கு பதிலாக 72 பேர் பயணிக்கும் வகையில், நன்கொடையாளர் மூலம் 2023 ஜனவரியில் ₹1 கோடி மதிப்பில் டிவி, குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட வின்ச் பெட்டி கொண்டு வரப்பட்டன. இதை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

The post பழநியில் அதிநவீன புதிய வின்ச் appeared first on Dinakaran.

Tags : Palani ,Palani Thandayuthapani Swamy hill temple ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை