×

தைப்பூசத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மந்தம்

சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 3,000க்கும் ஐஸ் மல்லி 2400க்கும் காட்டு மல்லி 2,000க்கும் முல்லை 1, 200க்கும் கனகாம்பரம் மற்றும் ஜாதி மல்லி 800க்கும் அரளி பூ 300க்கும் சாமந்தி 80க்கும் சம்பங்கி 70க்கும் பன்னீர்ரோஸ் 100க்கும் சாக்லேட் ரோஸ், 120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘நாளை (இன்று) தைப்பூசத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயரும் என எதிர்பார்த்தும், ஏமாற்றம்தான் அடைந்தோம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அனைத்து பூக்களின் விலை நேற்று காலை மந்த நிலையில் விற்பனை செய்யப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை, ஒசூர், நிலக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்களில் ஒரு கிலோ மல்லி 4,000 என விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தைப்பூசத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Thaipusam ,Chennai ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...