×

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: உத்திரமேரூர் எம்எல்ஏ வழங்கினார்

உத்திரமேரூர்: மருத்துவான்பாடி கிராமத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 110 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன், உத்திரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதாஞானசேகரன், துணை பெருந்தலைவர் வசந்திகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.

இதில், காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, மக்கள் தொடர்பு முகாமினை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர், 6 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு திறன்பேசி, 1 மாற்றுத்திறனாளிக்கு மூன்றுசக்கர சைக்கிள், 38 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 20 நபர்கள் தனிநபர் விவசாய கிணறு அமைத்தல், 1 பயனாளி மகளிர் சுயஉதவி குழு கடனுதவி 6 குழுக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் 5 நபர்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலைதுறை சார்பில் 10 நபர்கள், கால்நடை பராமரிப்பு கடனுதவி 23 நபர்கள் என மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 80 ஆயிரத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் வழங்கினார். முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு, தங்களது துறை ரீதியான அரசின் திட்டப் பணிகள் குறித்து விளக்கிக்கூறினர். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: உத்திரமேரூர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Uttaramerur MLA ,Uttaramerur ,Sundar ,Madhikanpadi village ,Uthramerur ,Madhyapanadi ,Kancheepuram District ,Collector ,Kalachelvi Mohan… ,Uthramerur MLA ,Dinakaran ,
× RELATED காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி முகாம்