×

சென்னையிலிருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீர் ரத்து: பயணிகள் அவதி

சென்னை: சென்னையிலிருந்து இலங்கை செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இலங்கையில் இருந்து அதிகாலை 2 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் அதிகாலை 3 மணிக்கு இலங்கை புறப்பட்டு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று அதிகாலை 3 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 130 பயணிகள் புறப்பட தயாராக இருந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையில் இருந்து சென்னைக்கு வரவில்லை. இதனால் அந்த விமானம் நேற்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படது. இந்த தகவல் பயணிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தகவல் கிடைக்காத நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள், விமான நிலையத்தில் நள்ளிரவில் வந்து காத்திருந்து, விமானம் ரத்து என்பதை அறிந்த பின்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கவுண்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அமைதிப்படுத்தினர். அதன் பின்பு பயணிகள் பலர், தங்கள் டிக்கெட்டுகளை வேறு விமானங்களுக்கு மாற்றியும், சிலர் டிக்கெட்டுகளை ரத்து செய்தும், வேறு சிலர் நாளை விமானத்தில் பயணிப்பதற்கு டிக்கெட்டுகளை மாற்றிக் கொண்டும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post சென்னையிலிருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீர் ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : SriLankan Airlines ,Chennai ,Sri Lanka ,Chennai International Airport ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...