×

சட்டத்திற்கு உட்பட்டு கிராம சபை கூட்டங்கள் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 2020 அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றை காரணம் காட்டி, அந்த கூட்டங்களை ரத்து செய்து கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச் செயலாளர் மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா , நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மநீம வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எந்த முக்கிய காரணமும் இல்லாமல் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதம் என்றார். அரசு பிளீடர் பி.முத்துக்குமார், கொரோனா ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக திரும்பப்பெறப்படாத நிலையிலேயே 2020ல் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கடுத்த ஆண்டுகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது என்றார். இதையடுத்து நீதிபதிகள், கிராம சபை கூட்டங்கள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

The post சட்டத்திற்கு உட்பட்டு கிராம சபை கூட்டங்கள் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Chennai ,Rural ,Development ,Gram ,Sabha ,Gandhi ,Jayanti ,Tamil Nadu ,
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...