×

முந்தைய ஆண்டை விட இரட்டிப்பு; பைஜூஸ் நிறுவனத்துக்கு ₹8,245 கோடி இழப்பு

புதுடெல்லி: ஆன்லைனில் கல்வி கற்பிக்கும் கல்வி நுட்பத்துறையில் முன்னணி நிறுவனமான பைஜூஸ், தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் இந் நிறுவனம் கார்ப்பொரேட் விவகார அமைச்சகத்தில் 2021-22 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:
பைஜூஸ் நிறுவனம் கடந்த 2021-22 நிதியாண்டில் வரிக்கு முந்தைய இழப்பாக ₹8,370 கோடி இழப்பை சந்தித்துள்ளது. வரிக்கு முந்தைய வருவாயாக ₹6,679 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய 2020-21 நிதியாண்டில் இந்த நிறுவனம் ₹4,143 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இழப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதுமட்டுமின்றி, சமீபத்தில் பிளாக் ராக் நிறுவனம் பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு ₹1,80,400 கோடியில் இருந்து ₹8,200 கோடியாக குறைந்தது .

The post முந்தைய ஆண்டை விட இரட்டிப்பு; பைஜூஸ் நிறுவனத்துக்கு ₹8,245 கோடி இழப்பு appeared first on Dinakaran.

Tags : ByJuice ,NEW DELHI ,Ministry of Corporate Affairs ,Byjus ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...