- பாதுகாப்பு கவுன்சில்
- ஐ.நா.
- புது தில்லி
- ஐ.நா. பொதுச் சபை
- ஜனாதிபதி
- டென்னிஸ் பிரான்சிஸ்
- இந்தியா
- வெளியுறவு அமைச்சர்
- தில்லி
புதுடெல்லி; தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் இன்றைய யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை என்று ஐ.நா பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தார். ஐநா பொதுச்சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் இந்தியா வந்துள்ளார். 5 நாள் பயணமாக வந்துள்ள அவர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு அவர் கூறும்போது,’ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய அமைப்பு உலகின் சமகால புவிசார் அரசியல் யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை. எனவே பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை. உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த சமீபத்திய ஆண்டுகளில் பாதுகாப்பு கவுன்சில் படிப்படியாக முடிவுகளை எடுக்க முடியவில்லை. எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் முற்றிலும் அவசியம்’ என்றார்.
The post பாதுகாப்பு கவுன்சில் யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை: ஐநா தலைவர் கருத்து appeared first on Dinakaran.