×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து சேவை தொடக்கம்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்து சேவைகள் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்து சேவைகள் நேற்று மாலை முதல் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, பல ஆண்டுகளாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயங்கி வந்த ஆம்னி பேருந்துகள் தற்போது பொங்கல் பண்டிகை முடிந்ததும் ரூ.394 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளுக்கு மட்டும் 5 நடைமேடைகளில் 77 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதை தவிர 170 ஆம்னி பேருந்துகள் இந்த முனையத்திலேயே பணியில்லா பேருந்து நிறுத்துவதற்கான இட வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து துறை மற்றும் சிஎம்டிஏ நிர்வாகத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நேற்று காலை முதல் மதியம் வரை ஆய்வு செய்தனர். பின்னர் இதற்கான ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினர். இதில் ஆன்லைனில் புக்கிங் செய்த பஸ் பயணிகள் கோயம்பேட்டிற்கு சென்று பஸ் ஏறும் நிலை மாறி தற்போது எளிதாக சென்று வரும் வகையில் கேளம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளில் ஏறி மகிழ்ந்தனர். இதுகுறித்து தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் பஸ் பயணிகள் கூறுகையில், ‘வளர்ந்து வரும் பகுதியான தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பஸ் பயணிகள் பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களில் உள்ள தனது சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக இதற்கு முன்பு கோயம்பேடு சென்றுதான் வர வேண்டும். அவ்வாறு செல்வதற்காக வண்டலூரில் இருந்து கோயம்பேடுக்கு செல்வதற்காகவே 3 மணி நேரம் ஆகிவிடும். இதில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவியாய் தவித்து வந்தோம். தற்போது அந்த நிலை மாறி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று வருவதற்கு எளிதாக உள்ளது. ஆனால் இதில் சென்னையில் இருந்து வருபவர்கள் மட்டுமே சிரமம் ஏற்படும் என கூறினர்.

* அலைமோதிய பயணிகள் கூட்டம்

இன்று தைப்பூசம் அதனை தொடர்ந்து, சுதந்திர தின விழா நாளை மறு தினம் சனி மற்றும் ஞாயிற்று கிழமை என தொடர்ந்து 4க்கு நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக தென்மாவட்ட பஸ் பயணிகள் நேற்று இரவு முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதில் ஆம்னி மற்றும் அரசு பஸ்களில் ஏறுவதற்காக பயணிகள் கூட்டம் அலைமோதி வருகின்றது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Omni Bus Service ,Clambakkam Bus Station ,Guduvanchery ,Omni bus services ,Klambakkam bus station ,Klampakkam Kalainar Centenary Bus Terminal ,Klampakkam GST Road ,Chengalpattu District ,Vandalur ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...