×

ராமர் கோயில் கட்டியதால் மக்கள் அனைவரும் பாஜக பக்கம் செல்வார்கள் என்பது தவறான கருத்து: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: கோயில் கட்டினால் மட்டுமே மக்கள் ஓட்டு போட்டுவிட மாட்டார்கள் என அயோத்தி ராமர் கோயில் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சராக தான் இருந்தபோது ஏராளமான கோயில்களை கட்டியதாகவும் அதனடிப்படையில் பார்த்தால் தனக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். கோயில் கட்டினால் எல்லோரும் மோடி பக்கமே சென்றுவிடுவார்கள் என்பது தவறான கருத்து என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சரியான கூட்டணியை அமைக்கும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. கோவிலை கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால் எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும். அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம். அதிமுக ஆட்சியில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டுவரப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து திறந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ராமர் கோயில் கட்டியதால் மக்கள் அனைவரும் பாஜக பக்கம் செல்வார்கள் என்பது தவறான கருத்து: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Ramar Temple ,Edappadi Palanisami ,Salem ,Chennai ,Eadapadi Palanisami ,Ayodhi Ramar Temple ,minister ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் முர்மு இன்று வழிபாடு