×

ஸ்ட்ராபெர்ரியின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஸ்ட்ராபெர்ரி ஒரு இனிப்பு, புளிப்பு மற்றும் அடர் சிவப்பு நிற பழமாகும். இப்பழத்தின் தாயகம் ஐரோப்பாவாகும். ஆனால், சமீபகாலமாக இந்தியாவிலும் ஸ்ட்ராபெர்ரி மிகவும் பிரபலமாக உள்ளது. ஸ்ட்ராபெர்ரிகள் மற்ற உணவுப் பொருட்களை அலங்கரிப்பதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதாக பலரும் நினைகின்றனர். ஆனால், ஸ்ட்ராபெர்ரி தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழமாகும். இது உடலின் வலிமைக்கு பல வழிகளில் உதவுகிறது. இதன் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை சில குறிப்பிட்ட பழங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர்செய்து, ரத்த செல்களை ஒழுங்குசெய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன. சுவையும், மணமும் கொண்ட இந்தப் பழத்திற்கு, சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச்செய்யும் குணம் ஸ்ட்ராபெர்ரிக்கு உண்டு. மேலும், வெயிலினால் ஏற்படும் சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.அழகுச் சாதனப்பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. மேலும் இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்யவும் உணவுகளின் நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்ட்ரா பெர்ரிகளை போட்டு மசித்து, அதில் 2 தேக்கரண்டி தேன் கலந்து விழுதாக்கி. தோலில் உள்ள கறைகளின் மீது தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும். வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், கறை மறையும்.

தொகுப்பு: ஸ்ரீ

The post ஸ்ட்ராபெர்ரியின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Tags : Europe ,India ,Dinakaran ,
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...