×

தனது நாவலைத் திருடி ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி புகார்

சென்னை: தனது ‘பட்டத்து யானை’ என்ற நாவலை திருடி நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது ‘பட்டத்து யானை’ என்ற நாவலை திருடி ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி புகார் அளித்துள்ளார்.

தனது ‘பட்டத்து யானை’ நாவலை தழுவி ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தனது ‘பட்டத்து யானை’ நாவலை சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம், இயக்குனர் அருண் மாதேஸ்வரனிடம் விளக்கம் பெற்று ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் கதை யாருக்கு சொந்தமானது எனவும் ‘பட்டத்து யானை’ நாவலை தழுவிதான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது.

The post தனது நாவலைத் திருடி ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி புகார் appeared first on Dinakaran.

Tags : Vela Ramamoorthy ,Chennai ,Dhanush ,Pongal ,
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்