×

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: சாதனை படைக்க காத்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஹைட்ரபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை(ஜன.25) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமேயானால் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சாதனை படைக்க வாய்ப்புகள் மிகுதியாக உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. 179 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இருந்து 490 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிராக பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார். இந்தப் பட்டியலில் அனில் கும்ப்ளே (619) முதலிடத்தில் உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பி.எஸ்.சந்திரசேகர் படைத்துள்ளார். 38 இன்னிங்ஸ்களில் பந்துவீசிய சந்திரசேகர் 95 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை எழுதினார். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 88 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வினுக்கு இந்த தொடரை முறியடிக்க 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்ய அஸ்வினுக்கும் வாய்ப்பு உள்ளது. அனில் கும்ப்ளே டெஸ்டில் 35 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் 34 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார்.

The post இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: சாதனை படைக்க காத்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்! appeared first on Dinakaran.

Tags : England ,Ravichandran Aswin ,Hyderabad ,India ,Dinakaran ,
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து