×

கூடுதல் கட்டணம் வசூலித்த பரனூர் சுங்கச்சாவடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மப்பேடு பகுதியை சேர்ந்தவர் தனசிங். இவருக்கு சொந்தமான டெம்போ வேன் மூலம் சுயதொழில் செய்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு சேலையூரில் காலி செய்யப்பட்ட வீட்டிலிருந்து பொருட்களை வேனில் ஏற்றிக்கொண்டு, ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் இறக்கிவிடும் சவாரிக்கு தனசிங் சென்றிருக்கிறார்.

இதற்காக, தனது வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரத்தை பாஸ்டேக் ரீசார்ஜ் செய்துள்ளார். பின்னர் ராமநாதபுரத்தில் பொருட்களை இறக்கிவிட்டு வேனில் தனசிங் செங்கல்பட்டு திரும்பியுள்ளார். அப்போது பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்கள், பாஸ்டேக் வேலை செய்யவில்லை எனக் கூறி, தனசிங்கிடம் இருமடங்கு கட்டணத்தை வசூலித்துள்ளனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் தனசிங் விசாரித்தபோது, பரனூர் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் நன்றாக உள்ளது. அதில் எவ்வித கோளாறும் இல்லை எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான தனசிங், இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு, செப்டம்பர் 6ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், தனசிங்கின் பாஸ்டேக் வங்கி கணக்கில் போதிய பணம் இருந்தும், அவரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த குற்றத்துக்காக பரனூர் சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் வழங்கும்படி உத்தரவிட்டது.

The post கூடுதல் கட்டணம் வசூலித்த பரனூர் சுங்கச்சாவடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Paranur ,tollbooth ,Chengalpattu ,Thanasingh ,Mapedu ,Selaiyur ,Ramanathapuram ,
× RELATED தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம்