×

ராமேஸ்வரம்,ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம், ராமநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் தெப்ப உற்சவம் இக்கோயிலின் உபகோயிலான லெட்சுமனேஸ்வரர் திருக்கோயிலில் இன்று பிள்ளையார் தெப்பம் இரவு 7.00 மணி அளிவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, 25.01.2024 தை 11ம்தேதி வியாழக் கிழமை தைப்பூசம் தெப்ப உற்சவம், தீர்த்த உற்சவம் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 4.00 மணிக்கு நடைதிறந்து 5.00 மணிமுதல் 5.30 மணிவரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து பூஜா காலங்கள் சாயரட்சை பூஜை வரை நடைபெற்று காலை 10.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடானவுடன் திருக்கோயில் நடை சாத்தப்படும்.

பகல் 1.25 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடைபெற்று மாலை 5.00 மணிக்கு மேல் தெப்ப மண்டபத்தில் தீபாராதனை நடைபெற்று மாலை 6.00 மணிக்கு மேல் இரவு 7.00 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் தெப்பம் எழுந்தருளல்.

இரவு 8.00 மணிக்கு தீபாராதனை நடைபெற்று திருக்கோயிலுக்கு திரும்புதல் வீதி உலா நடைபெறும். எனவே அன்று காலை 10.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

The post ராமேஸ்வரம்,ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ramanathaswamy ,Thaipusam ,Theppa Utsavam ,Ramanathaswamy Temple ,Letchumaneswarar Temple ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...