×

உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் ‘O’ – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

டெல்லி: உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணை தேசிய மருத்துவ ஆணையம் பூஜ்ஜியமாக குறைத்தது. நாடு முழுவதும் காலியாக உள்ள 1000 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை நிரப்ப நீட் கப் ஆப் குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 5,000 உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் உள்ளன. ஏற்கனவே 2023-ல் நீட் பிஜி கட் ஆப் மதிப்பெண்ணை 20 பர்சன்டைலாக தேசிய மருத்துவ ஆணையம் குறைத்தது. உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான ஆண்டு கட்டணமாக தனியார் மருத்துவ கல்லூரிகள் ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை வசூலிக்கின்றன.

1000 உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது. நீட் கப் ஆப் மதிப்பெண்ணை குறைத்தது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். நீட் கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்தது ஏற்க முடியாதது என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தகுதியே பெற தேவையில்லை என்றால் எதற்காக நீட் தேர்வு நடத்த வேண்டும். தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக நீட் கட் ஆப்-ஐ குறைத்ததை தவறானதாகும் என்று கூறினார்.

The post உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் ‘O’ – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : NATIONAL MEDICAL COMMISSION ANNOUNCEMENT ,Delhi ,National Medical Commission ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...