×

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அறிவிப்பு


சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அறிவித்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று மாலை, கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில், முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், துணை வேந்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பர்.

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அறிவித்தியுள்ளது. தேநீர் விருந்தை இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புறக்கணித்துள்ளது. வள்ளுவருக்கு காவி உடை, மகாத்மா காந்தி குறித்த ஆளுநரின் பேச்சு சர்ச்சையான நிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை; ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் முடிவு செய்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, கலை, இலக்கியங்களுக்கு எதிராக பேசுகிறார் ஆளுநர். வரலாற்றை சிதைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். ஆர்.எஸ்.எஸ் தொண்டனை போல் செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு கூறினார்.

The post ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Communists ,Governor ,CHENNAI ,Communist ,Republic Day ,Independence Day ,House ,Chief Minister ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு