×

₹2.84 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோடு, ஜன.24: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 152 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹5699 முதல் ₹7299 வரையிலும் ஏலம் போனது. இதன்மூலம் ₹2.84 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹2.84 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Association ,Dinakaran ,
× RELATED தொழிலாளர் நல சங்க ஆண்டு விழா