×

இஜிஎஸ்பிள்ளை மருத்துவமனையில் ரத்ததான முகாம் மழையால் சேதமான பயறுக்கு அரசு அறிவித்த நிவாரணம் தொகை வழங்க வேண்டும்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுந்து பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை பல கிராமங்களில் ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை. இது அரசு அதிகாரிகளின் தவறினால் ஏற்பட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் குருகோபிகணேசன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை மற்றும் இயற்கை சீற்றத்தால் உளுந்து பயறு சேதமடைந்ததால், பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஹேக்டருக்கு ரூ.3 ஆயிரம் நிவாரணம் தொகையை அரசு அறிவித்தது. பல விவசாயிகள் நிவாரணம் தொகை பெற்றுள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகளின் தவறினால் பல கிராமங்களில் ஒட்டு மொத்தமாக விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கபெறவில்லை. நிவாரணம் கிடைக்காத விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கடையூரில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண்மை உதவி இயக்குநராக இருந்த தாமஸ் மாற்றலாகி 6 மாதத்திற்கு மேலாகியும் அந்த பொறுப்பில் வேறு யாரும் நியமிக்கபடவில்லை.

The post இஜிஎஸ்பிள்ளை மருத்துவமனையில் ரத்ததான முகாம் மழையால் சேதமான பயறுக்கு அரசு அறிவித்த நிவாரணம் தொகை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : EGSpillai ,Tharangambadi ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது